Posts

இரை மற்றும் கொக்கி - தொமஸ் ப்ரூக்ஸ் ( 1652) The Bait and the Hook - Puritan. Thomas Brooks (1652).

Image
The Bait and the Hook  -  Puritan. Thomas Brooks (1652) இரை மற்றும் கொக்கி -  தொமஸ் ப்ரூக்ஸ் ( 1652)   சாத்தான் ஒரு மீனவன் அவன் ஒருபோதும் தூண்டில் உள்ள கொக்கியை வெளிப்படுத்துவதில்லை; அவன் காட்டுவது இரை மட்டுமே — பாவம் வாக்குறுதி செய்யும் இன்பம், இனிமை, லாபம் மட்டுமே. நீ பெறப்போகிறதை நோக்கி உன் கண்கள் நிலைத்திருக்கும்போது, நிச்சயமாக நீ இழப்பதைக் மறைக்கிறான்: அதாவது, தேவனுடைய கிருபை, உன் சமாதானம், உன் ஆனந்தம், சிலவேளைகளில் நீ எண்ணுவதற்கு மேலாக பலவற்றை இழக்கிறாய். இது அவன் முதலாவது யுக்தியே. தோட்டத்திலே அவன் ஏவாளிடத்தில், “உங்கள் கண்கள் திறக்கப்படும்; நீங்கள் தேவனைப்போல இருப்பீர்கள்” என்றான். இதோ அவன் காட்டின இரை — அறிவு, அதிகாரம், தேவனைப்போன்ற நிலை. ஆனால் கொக்கி என்ன? அவமானம், வெளியேற்றம், மரணம் — முழு மனு குலத்தையும் பாதித்தது  தடைசெய்யப்பட்ட கனியின் ஒரு பகுதிக்காக பரலோகத்தையே மாற்றிக்கொண்டார்கள். இன்றும் அதே பரிமாற்றத்தை மனிதர்களோடு அவன் செய்கிறான். இயேசுவிடத்திலும் அவன் இதையே முயன்றான். உலக இராஜ்யங்களையெல்லாம் அவன் முன்வைத்து, அவற்றின் மகிமையையும் அழகையும் கா...

ஆண்டவரே, இந்த பாவத்தை அடித்து நொறுக்கும் - தொமஸ் வாட்சன். O Lord, Smite this sin. - Thomas Watson. (1620-1686).

Image
  நாம் தேவனுடைய வார்த்தையின் பரிசுத்தத்தை நேசிக்கிறோமா? தேவனுடைய வார்த்தை பாவத்தை அடித்து நொறுக்கவும், பரிசுத்தத்தில் வளரவும் பிரசங்கிக்கப்படுகிறது. அதன் ஆவிக்குரிய தன்மைக்காகவும் தூய்மைக்காகவும் நாம் அதை நேசிக்கிறோமா? அநேகர் பிரசங்கிக்கப்படும் வார்த்தையை அதன் அழகிய பேச்சுக்காகவும் கருத்துக்காகவும் மாத்திரம் நேசிக்கிறார்கள். அவர்கள் பிரசங்கத்தை கேட்க வருகிறார்கள், ஆனால், இசை கச்சேரிக்கு வருவது போல வருகிறார்கள். (எசேக்கியேல் 33:31,32) அல்லது பூக்களைப் பறிப்பதற்கு ஒரு தோட்டத்திற்கு வருவதுபோல வருகிறார்கள் - ஆனால் தங்கள் ஆசைகளை இச்சைகளை அடக்கவோ, தங்கள் இருதயங்களை சுத்தப்படுத்தவோ அல்ல. இவர்கள் முகத்தை மட்டும் அலங்கரிக்கும் மூடப் பெண்களைப்போல, தங்கள் இருதய ஆரோக்கியத்தை அலட்சியம் செய்கிறார்கள். தேவ வார்த்தையின் கடிந்து கொள்ளுதலை நாம் நேசிக்கிறோமா? வார்த்தை நமது மனசாட்சியைத் தொட்டு, நமது பாவங்களுக்கு எதிராகக் கண்டன அம்புகளை எய்யும்போது அதை நேசிக்கிறோமா? பிரசங்கியின் கடமை சிலசமயம் கண்டிக்க வேண்டியது. பிரசங்க மேடையில் மென்மையான வார்த்தைகளைப் பேசக்கூடியவன், ஆனால் கண்டிக்கத் தெரியாதவன் - நல்ல ...

இயேசுவானவர் விசுவாசியின் பொக்கிஷம் - Jonathan Edwards (1703 -1758).

Image
  இயேசுவானவர் விசுவாசியின் பொக்கிஷம் - ஜோனத்தான் எட்வர்ட்ஸ் (1703 -1758). கிறிஸ்துவைப்போல் திருப்தியளிக்கும் பொக்கிஷம் வேறெங்கும் இல்லை; ஏனெனில் அவர் சகல சந்தோஷத்தின் ஊற்றும், நித்திய ஆனந்தத்தின் மூலமுமாயிருக்கிறார். விசுவாசி கிறிஸ்துவை எல்லாவற்றிற்கும் மேலாக மதிப்பவன்; ஏனெனில் அவர் உயர்ந்த நன்மையாகவும், அவருக்குள் சகல ஆசைகளும் பூரணமாக நிறைவேறுகின்றன. கிறிஸ்து மகா விலையுள்ள முத்து; அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்படி விசுவாசி தன் சகலத்தையும் மகிழ்ச்சியோடு விற்றுவிடுகிறான். உண்மையான பரிசுத்தவான் கிறிஸ்துவின் அழகையும் மகிமையையும் கண்டு மகிழ்கிறான்; ஏனெனில் அவர் முற்றிலும் அழகுள்ளவர்! (உன்னதப்பாட்டு 5:16) உண்மையான விசுவாசி கிறிஸ்துவை உலகத்திற்கு மேலாக மதிப்பவன்; அவரை அறிந்து கொள்ளும் மேன்மையின் நிமித்தம் சகலத்தையும் நஷ்டமாக எண்ணி, அவைகளை எல்லாம் குப்பையுமாக கருதுகிறான் (பிலிப்பியர் 3:11). கிறிஸ்துவின் அன்பு ஆத்துமாவை இனிமையான பொக்கிஷமாக நிரப்புகிறது; பூலோக சுகங்கள் யாவும் ஒன்றுமில்லாதவையாகத் தோன்றச் செய்கிறது. கிறிஸ்து நம்முடைய பொக்கிஷமாயிருக்கும்போது, அவரை நம்முடைய நித்திய சுதந்தரமாக மகிழ...

கனி தரும் கிறிஸ்தவத்தின் நான்கு அடையாளங்கள் - ஜே. சி. ரைல். Four Marks of Fruit-Bearing Christianity - J.C. Ryle. ( 1816 - 1900)

Image
கனி தரும் கிறிஸ்தவத்தின் நான்கு அடையாளங்கள் - ஜே. சி. ரைல். Four Marks of Fruit-Bearing Christianity - J.C. Ryle. ( 1816 - 1900)  "கனி தருகிற கிறிஸ்தவம்" என்று நான் அழைக்கிற காரியம், மனுகுலத்தின் மேல் அது உண்டாக்குகிற ஆசீர்வாதமான விளைவுகளினால் தனது தெய்வீக சுபாவாத்தை வெளிப்படுத்துகிறது. அவிசுவாசிகள் எவ்விதத்திலும் மறுதலிக்க முடியாத அத்தகைய கிறிஸ்தவம் முற்றிலும் ஒரு வித்தியாசமான காரியமாகும். அதன் முக்கியமான அடையாளங்களையும் தன்மைகளையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்: (1) கனி தருகிற கிறிஸ்தவமானது, பரிசுத்த வேதவாக்கியங்கள் தேவ ஆவியினால் அருளப்பட்டவை (Inspiration) என்பதையும், அவை போதுமானவை (Sufficiency) மற்றும் உன்னதமானவை (Supremacy) என்பதையும் எப்போதும் போதித்து வந்திருக்கிறது. பக்திக்குறிய விஷயங்களில் நம்பிக்கைக்கும், நடைமுறைக்கும் ஒரே நம்பத்தக்க விதி என்பது எழுதப்பட்ட தேவவசனமே என மக்களுக்கு அது கூறியிருக்கிறது; இந்த வேதத்தில் இல்லாத ஒன்றை எதையும் தேவன் நம்பும்படி கேட்பதில்லை, அதற்கு முரணான எதுவும் சரியானதல்ல என்றும் அது உறுதிப்படுத்தியிருக்கிறது. மனுஷனுடைய அறிவு, மனுஷனுடைய சிந்...

நாம் தேவன் மீது அன்பு செலுத்துகிறோமா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? - தாமஸ் வாட்சன். How May We Know Whether We Love God? - Puritan Thomas Watson (1620-1686)

Image
  1.தேவனை நேசிப்பவன், அவரது பிரசன்னத்தை விரும்புவான். பொதுவாக அன்பில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பிரிந்து இருக்க முடியாது; தம் அன்புக்குரியவர்களை காண முடியாதபோது அவர்கள் மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள். தேவனை ஆழமாக நேசிக்கும் ஒரு ஆத்துமா, அவரை அவருடைய — வார்த்தை, ஜெபம், ஓய்வு நாள் ஆராதனை, திருநியமனங்கள் அனைத்தும் — அனுபவிக்க விரும்புகிறது. தாவீது தேவனை காணாதபோது மயங்கப்போகிறேன் என்று சொல்லுகிறார்: "என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது"(சங்கீதம் 84:2). தேவனுடைய நியமங்களில் அக்கறை இல்லாதவர்கள், “ ஓய்வு நாள் எப்போது கடந்து போகும்?” என்று நினைப்பவர்கள். இது, தாங்கள் தேவனை நேசிப்பதில்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறார்கள். 2. தேவனை நேசிப்பவன் பாவத்தை நேசிப்பதில்லை. "கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்"(சங். 97:10). தேவன்பற்றிய அன்பும், பாவப்பற்றிய அன்பும்,  இரும்பும் களிமண்ணும் ஒன்றாக கலக்காதது போல் ஒன்றாக இருக்க முடியாது. நாம் நேசிக்கும் ஒவ்வொரு பாவமும் தேவனுடைய பரிசுத்த தன்மையையே தாக்குகிறது; ஆனால் தேவனை நேசிப்...

உண்மையான மனமாற்றம். - சார்ல்ஸ் எச் ஸ்பர்ஜன். True Repentance - Charles H Spurgeon. (1834 - 1892)

Image
உண்மையான, பாவத்திற்கான, ஆவிக்குரிய  துக்கம் பரிசுத்த ஆவியின் வேலையாகும். மனமாற்றம் என்பது மனித இயல்பு என்னும் மண்ணில் வளர மிகவும் அருமையான மலர் போன்றதாகும். முத்துக்கள் சிப்பிகளில் இயற்கையாக உருவாகலாம், ஆனால் மனமாற்றமானது, தெய்வீக கிருபை அதை நடவு செய்யாவிட்டால், பாவிகளில் இயற்கையாக ஒருபோதும் வளராது.  உங்களுக்கு பாவத்தின் மீது சிறிதளவேனும் உண்மையான வெறுப்பு இருக்குமென்றால், அது கடவுளே உங்களுக்கு அருளியதால் தான், ஏனெனில் மனித இயல்பின் முட்புதர்கள் எப்போதும் அத்திப் பழங்களைத் தருவதில்லை. "மாம்சத்தில் பிறப்பது மாம்சமே." உண்மையான மனமாற்றம் எப்போதும் இரட்சகரையே நோக்கியிருக்கும். நாம் பாவத்திற்காக மனம் மாறும்போது, நமது ஒரு கண் நமது பாவத்தையும், மற்றொரு கண் சிலுவையையும் பார்க்க வேண்டும். நமது இரு கண்களும் கிறிஸ்துவின் மீதே நிலைநாட்டப்பட்டு, நமது மீறுதல்களை அவரது அன்பின் வழியாக மட்டுமே காணுவோமென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். பாவத்திற்கான உண்மையான துக்கம் மிகவும் நடைமுறை சார்ந்ததாகும். ஒருவர் தொடர்ந்து பாவத்திலேயே வாழ்ந்துகொண்டிருந்தால், தாம் பாவத்தை வெறுக்கிறோம் என்று க...