உண்மையான மனமாற்றம். - சார்ல்ஸ் எச் ஸ்பர்ஜன். True Repentance - Charles H Spurgeon. (1834 - 1892)
உண்மையான மனமாற்றம் எப்போதும் இரட்சகரையே நோக்கியிருக்கும். நாம் பாவத்திற்காக மனம் மாறும்போது, நமது ஒரு கண் நமது பாவத்தையும், மற்றொரு கண் சிலுவையையும் பார்க்க வேண்டும். நமது இரு கண்களும் கிறிஸ்துவின் மீதே நிலைநாட்டப்பட்டு, நமது மீறுதல்களை அவரது அன்பின் வழியாக மட்டுமே காணுவோமென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பாவத்திற்கான உண்மையான துக்கம் மிகவும் நடைமுறை சார்ந்ததாகும். ஒருவர் தொடர்ந்து பாவத்திலேயே வாழ்ந்துகொண்டிருந்தால், தாம் பாவத்தை வெறுக்கிறோம் என்று கூறிக்கொள்ள முடியாது. மனமாற்றம், பாவத்தின் கொடூரத்தை ஒரு கருத்தாக மட்டுமல்ல, அனுபவத்தின் மூலமும் காட்டுகிறது—சுடப்பட்ட பிறகு நெருப்பை அஞ்சும் ஒரு குழந்தையைப் போல. கொள்ளையடிக்கப்பட்டு தாக்கப்பட்ட ஒருவர், சாலையில் செல்லும் போதெல்லாம் திருடனை குறித்து எவ்வாறு அஞ்சுகிறாரோ, அதே போல் நாமும் பாவத்தை குறித்து அஞ்சுவோம். பெரிய பாம்புகளைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் சிறிய பாம்புகளையும் தவிர்ப்பது போல, பெரிய விஷயங்களில் மட்டுமல்ல, சிறிய விஷயங்களிலும் நாம் பாவத்தை தவிர்ப்போம்.
பாவத்திற்கான உண்மையான துக்கம் நாம் பேசும் வார்த்தைகள் மற்றும் செயல்களைப் பற்றி மிகவும் கவனமாக இருக்கச் செய்யும். மேலும் எதையும் (அல்லது எவரையும்) காயப்படுத்தாதவாறு எச்சரிக்கையாய் இருப்போம். ஒவ்வொரு நாளின் முடிவிலும், நமது தவறுகளை ஒப்புக்கொள்வோம், ஒவ்வொரு காலையிலும், நாம் அவருக்கு எதிராக பாவம் செய்வதிலிருந்து தேவன் நம்மைக் காத்தருள வேண்டும் எனப் ஜெபத்துடன் எழுவோம்.
உண்மையான மனமாற்றம், தொடர்ச்சியானது. விசுவாசிகள், தங்கள் இறக்கும் நாள் வரை மனம் மாறுகிறார்கள். மனமாற்றம் என்பது வந்து போகும் ஒன்றல்ல. மற்ற எல்லா துக்கங்களும் காலத்தோடு மறைந்துவிடும், ஆனால் இந்த துக்கம் நாம் அவரில் வளரும்போது மேலும் வளருகிறதாய் இருக்கிறது. மேலும் இது இனிமையும் கசப்புமாகக் கலந்த ஒரு ஈவு — நித்திய இளைப்பாறுதலுக்குள் நுழையும் வரை நாம் அதற்காக நன்றி உள்ளவர்களாய் இருப்போம்.
To Contact:
Pastor. Thomas Edison,
Grace Reformed Baptist Church,
Thindu, Semmedu Post,
Kolli Hills, Tk,
Namakkal District.
PIN : 637411
Ph.no : 04286 247595
9442800595
E-Mail: gracerbcmail@gmail.com
Comments
Post a Comment